இந்திய நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன.
கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வேட்பாளர்களை அறிவித்த கட்சிகள்
இந்நிலையில் இந்நியாவின் ஆளும் கட்சியான பாஜக 2 கட்டமாக 267 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும் 2 கட்டமாக 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளன.
இதற்கமைய வெற்றிடமாக இருந்த தேர்தல் ஆணையர் மற்றும் பதவி விலகிய செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோர் பதவிகளுக்கு நேற்று புதிதாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்விர் சிங் சாந்து ஆகியோர் இன்று காலை பதவியேற்றுற்றனர்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 2024 பொதுத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.